சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சத்யராஜ்க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் இந்திய அரசின் விண்வெளித்துறைச் செயலரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான ஏ.எஸ்.கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.


இந்த விழாவில் சத்யராஜ்க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணை வேந்தர், தலைவர், துணைத் தலைவர் உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில் 1872 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.