ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். படம் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யா பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டாப் சைக்கோ த்ரில்லர் படங்களின் லிஸ்ட்


இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 


இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த ஒரு முக்கிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுயடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி டிரெண்டாகி வருகிறது.



மேலும் படிக்க | ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ