இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மிகுந்து எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் தான் கிறிஸ்டோபர். இதில் அமலா பால், வினய், சரத்குமார், சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி  போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் வினய் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். கிறிஸ்டோபர் கேரள காவல்துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார், அவர் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு முன்பே என்கவுண்டர் செய்வதில்புகழ் பெற்றவர். இதனால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாலிவுட்டை ஆளும் தென்னிந்திய படங்கள்! காரணம் அடுக்கும் அனுராக் காஷ்யப்


கிறிஸ்டோபரைப் பற்றிய துறை ரீதியான விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விசாரணையில் என்ன கண்டுபிடிக்கிறார்கள், அந்த விசாரணையில் கிறிஸ்டோபருக்கு என்ன நடக்கிறது என்பதுதான்  படத்தின் கதை அம்சமே. முதல் பாதி முழுவதுமே அவரது பிளாஷ் பேக் சொல்லவே அதிக நேரம் எடுத்துதுள்ளனர், இதனால் பில்ட் அப்  அதிகப்படுத்துகிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில், என்ன நடிக்க போகிறது என்பதை எளிதில் கணிக்க முடியும் வகையில் திரைகதை அமைந்தது. 



ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் அமலா பால் நடித்த பாத்திரங்கள் வழக்கமான பெண் ரோல்களில் இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது.  வினய் ராய் நடித்த வில்லன் கேரக்டர் நன்றாக இருந்தது.  மம்முட்டியின் நடிப்பு வழக்கம் போல ரசிக்கும்படியாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.  மம்முட்டி வரும் சில slow motion காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கு ஏற்றார் போல இருந்தது. மலையாளத்தில் வந்துள்ள மற்றொரு சூப்பர் ஹிட் படம் கிறிஸ்டோபர்.


மேலும் படிக்க | ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - ஷாருகான்! அதுவும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ