கடைசி படத்திற்கு தளபதி விஜய் வாங்கப்போகும் சம்பளம் இவ்வளவு கோடிகளா?
Thalapathy Vijay Salary: தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். தென்னிந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிப்பது, வெளியீட்டிற்கு முன்பே உறுதியாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. தற்போது திரையுலகில் மிக உயர்ந்த இடத்தில் இருந்து வருகிறார் நடிகர் விஜய். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் 'தளபதி 69' படத்திற்காக வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.
நடிகர் விஜய்:
தற்போது வரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணம் கூடிய விரைவிலேயே முடிவடைய உள்ளது. காரணம், விஜய் தனது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க | டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!
அரசியலில் விஜய்.. புதிய கட்சி 'தமிழக வெற்றி கழகம்':
சில தினங்களுக்கு முன்பு, (பிப்ரவரி 2) நடிகர் விஜய் அவரது அரசியல் கட்சியை டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அவரது அரசியல் கட்சியை அறிமுகம் செய்தார். இது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை கொண்டாடும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ரசிகர்கள் அன்னதானம் வழங்கி வந்தனர். இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல விதமாக பேசப்பட்டது. விஜய்யின் இந்த அரசியல் எண்ட்ரிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
2026 சட்டப்பேரவை தேர்தல் இலக்கு:
தொடர்ந்து, ஜன. 24ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவராக அவரை தேர்வு செய்ததாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது எனவும், யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அவர் அறிவித்தார். குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதே தங்களின் குறிக்கோள் என்றும் விளக்கமாக தெரிவித்திருந்தார்.
கடைசி படம்:
இதனிடையே தற்போது நடிகர் விஜய் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ரூ. 125 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹிந்தி பதிப்பு ரூ.25 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் முடிந்தவுடன் அரசியலில் தீவிரமாக களமிறங்க காத்திருக்கும் விஜய், தளபதி 69 படத்துடன் தனது திரைவாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்து உள்ளார்.
தளபதி 69 அப்டேட்:
தளபதி 69 படத்தை பற்றி பேசுகையில், சமீபத்தில் தளபதி 69 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கவுள்ளார் என கூறப்பட்டது, பின்னர் இயக்குனர் வினோத் தளபதி 69 திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின, இருப்பினும் யார் இயக்குனர் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இயக்குனர் யாராக இருந்தாலும் இப்படத்தை DVV நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் தான் தற்போது விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்கவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தளபதி 69 படத்தில் விஜய் சம்பளம் எவ்வளவு?
இந்நிலையில் தற்போது GOAT படத்தில் நடிப்பதற்காக 200 கோடி சம்பளமாக வாங்கும் விஜய் தளபதி 69 படத்திற்கான அவரின் சம்பளம் எவ்வளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது தளபதி 69 படத்திற்காக விஜய் 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இந்த படத்திற்கு விஜய் 250 கோடி சம்பளமாக வாங்கினால் இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் LOVER! இது தான் கதையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ