பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய நாட்டை சேர்ந்த இரண்டு பிரபலங்களும், இலங்கை, மலேசியா நாட்டை சேர்ந்த இரு பிரபலங்களும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்களில் வெற்றியாளரை இணைய வாக்கெடுப்பு, தொலைபேசி வாக்கெடுப்பு வாயிலாக தேர்ந்தெடுக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டில் இருந்து பதிவு செய்யப்படும் வாக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கை-யே சேர்ந்த லாஸ்லியா மற்றும் மலேசியாவை செர்ந்த முகின் ராவ்-க்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க சாத்தியமான வழிகளை நாங்கள் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.


  • இந்தியாவில் இருக்கும் உங்கள் நண்பர்களை உங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள், இது எளிதான வழியாகும் 

  • VPN-ஐப் பயன்படுத்தி உங்கள் Android அல்லது iPhone இல் ஹாட்ஸ்டாரை நிறுவி உங்களுக்கு விருப்பமான போட்டியாளருக்கு வாக்களிக்கலாம்.

    • உங்கள் Android அல்லது iPhone இல் ஹாட்ஸ்டாரை நிறுவக்கூடிய சிறந்த VPN வழங்குநர்களில் Nord VPN ஒன்றாகும். Nord VPN-ஐ பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

    • Nord VPN உள்ளே ‘இந்தியா’-வை நாடாகத் தேர்ந்தெடுக்கவும்

    • இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஹாட்ஸ்டார் பயன்பாட்டை நிறுவலாம்

    • இப்போது ஹாட்ஸ்டாரில் உள்ள பிக் பாஸ் தமிழ் பிரிவுக்குச் சென்று உங்கள் விருப்ப போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள்.