Idhayam TV Serial Today Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரதா சொத்துக்களை தமிழ் பெயருக்கு மாற்றி எழுதி ஸ்வேதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது சாரதா காரில் வந்து கொண்டிருக்க மறுபக்கம் ஆதி மற்றும் பாரதி ஆட்டோவில் வந்து கொண்டிருக்கின்றனர். சாரதாவை பின்தொடர்ந்து வரும் ஸ்வேதா தன்னை எம்மாற்றி விட்டதாக கோபத்தில் வருகிறாள். இன்னைக்கு சொத்துக்களை என் பெயருக்கு மாற்றாமல் விட மாட்டேன் என்று வேகவேகமாக வந்து சாரதாவின் காரை வழிமறித்து நிற்க வைக்கிறாள்.


சாரதாவை காரை விட்டு இறங்க சொல்ல அவள் முடியாது என்று சொல்ல ஸ்வேதா நான் சொல்றத கேக்குற இடத்துல தான் நீங்க இருக்கீங்க என்று காரில் இருந்து இழுத்து வெளியே வர வைக்கிறாள். தங்களது காருக்குள் வலுக்கட்டாயமாக ஏற்றி சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி கொடுக்க கையெழுத்து போட சொல்லி அழைத்து செல்கின்றனர்.


சாரதா காரில் இருந்து குதிக்க முயற்சி செய்ய ஸ்வேதா சாரதாவை கிடுக்கு பிடி போட்டு அழைத்து செல்ல திடீரென ரோட்டில் ஒரு உருவம் நிற்க கார் தடுமாறி மரத்தில் மோதி நிற்கிறது. அதே போல் ஆதிக்கு சொத்துக்களை தமிழ் பெயருக்கு எழுதி வைத்திருப்பதாகவும் வந்து டாகுமெண்ட்டை வாங்கி கொள்ளுமாறு போன் வர ஆதியும் பாரதியும் அதிர்ச்சி அடைகின்றனர்.


இதை தொடர்ந்து ஆதி, பாரதி ஆட்டோவில் ரெஜிஸ்டர் ஆபிஸ் நோக்கி வர அறிவுவின் கார் மரத்தில் மோதி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இறங்கி ஓடி சாரதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர்.


அடுத்து வீட்டிற்கு வந்த ஆதி சாரதாவிடம் ஏன் மா இப்படி பண்ணீங்க? எல்லாம் முடிவு பண்ணி தானே ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு போனோம். அப்புறம் ஏன் இப்படி செய்தீங்க என்று கேள்வி கேட்கிறான். சாரதா எல்லாம் உனக்காக தான் என்று மன்னிப்பு கேட்கிறாள்.


சொத்து கிடைக்காத விரக்தியில் இருக்கும் ஸ்வேதாவும் அறிவும் இதயம் குறித்த உண்மையை உடைக்க முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - உன்னால் என் பொண்ணு வாழ்க்கையே போய்டுச்சு.. மதுவின் அம்மா கதறல் “நெஞ்சத்தை கிள்ளாதே”


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ