Jailer Showcase: ரஜினிகாந்த் நடிப்பில், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய வெரைட்டி படங்களை எடுத்த நெல்சன் இயக்கும் ஜெயிலர் படம் வரும் ஆக. 10ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால், தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாகியுள்ளது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், 'காவாலா', 'Hukum','ஜூஜூபி' என மூன்று பாடல்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டு பெரிதும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் அனைத்து பாடல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, ஜெயிலர் ஆல்பத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.


2 மணிநேரத்தில் 2 மில்லியன்...


காவாலா, Hukum பாடல்கள் யூ-ட்யூபில் தினந்தினம் அதிக பார்வையாளர்களை பெற்று வருகின்றன. படத்தின் வெளியீடும் நெருங்கி வருவதால் படக்குழுவும் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்வண்ணம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், படத்தின் டிரைலர் மீது பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது எனலாம். 



மேலும் படிக்க | Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்..! மொத்தம் இத்தனை பாடல்களா..?


டிரைலர் வெளியீட்டில் ஜெயிலர் படக்குழு ஒரு வித்தியாச அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, டிரைலரை 'Showcase' என்ற பெயரில் வெளியிடுவதாக அறிவித்தது. அதன்படி, Jailer Showcase வீடியோ இன்று மாலை 6 மணியளவில் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவுக்கு பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. வெளியாகி வெறும் 2 மணிநேரத்தில் 2 மில்லியன் (20 லட்சம்) வியூஸ்களை பெற்று அசத்தியுள்ளது. 



அந்த வீடியோவில் ரஜினி வழக்கம்போல் பட்டாசான லுக்கில் காணப்படுகிறார். அவர் வரும் அத்தனை பிரேம்களும் அனல் பறக்கின்றன. அவரின், "ஓரளவுக்கு மேலே நம்மகிட்ட பேச்சே கிடையாது... வீச்சுதான்", "ரொம்ப தூரம் போய்ட்டேன்... ஃபுல்லா முடிச்சிட்டு தான் திரும்ப வர முடியும்" ஆகிய வசனங்களை பலரும் தங்களின் ஸ்டேட்ஸ்களிலும், இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், நடிகர் விநாயகன் ரஜினியின் கதாபாத்திரத்தை,"டைகர் முத்துவேல் பாண்டியன்" என சொல்லும் பகுதியும் அதிகம் பகிரப்படுகிறது. 



தமன்னாவின் பாத்திரம் அவ்வளவு ரகசியமா?


ஆனால், இந்த Showcase வீடியோவில் ரம்யகிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் என அனைவரும் இடம்பெற்றிருந்தாலும் நடிகை தமன்னாவின் முகத்தையே காட்டவில்லை. இது நெட்டிசன்களிடம் அதிகம் கேள்விகளை எழுப்பியுள்ளது. டிரைலர் வீடியோவில் வைக்க இயலாத அளவிற்கு தமன்னா மிக முக்கிய காட்சிகளில் நடித்துள்ளாரா எனவும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மோகன்லால், ராஜ்குமார் போன்ற கதாபாத்திரங்கள் இதில் ரகசியம் காட்டப்பட்டாலும், தமன்னாவின் கதாபாத்திரமும் மறைத்துவைக்கப்படுவது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். 



காவாலா பாடலில் தமன்னா பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அவரின் கதாபாத்திரத்தை பலரும் இந்த வீடியோவில் எதிர்பார்த்திருந்தனர். இருப்பினும், இந்த வீடியோ ரஜினியின் மாஸ் பகுதியை ஒட்டிய தொகுக்கப்பட்டிருப்பதால் தமன்னாவின் கதாபாத்திரம் இதில் காட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இதில் ரெடிங் கிங்ஸிலியின் பாத்திரத்தையும் காட்டவில்லை.   


மேலும் படிக்க | 'காவலா’ பாடல் இந்தியில் ரிலீஸ்..! ஜெயிலர் பட விழாவிற்கு ’ஹாட்’ ஆக வந்த தமன்னா..!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ