தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்
பூஜா ஹெக்டே இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு தமிழில் சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வந்தார்...
"தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே (Pooja hegdey). இவர் தன் கைவசம் எண்ணற்ற படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
"இந்நிலையில் தமிழில் அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்ததுமே தமிழ்நாட்டில் உள்ள விஜய்யின் ரசிகர்கள் தங்கத்தட்டில் வைத்து ஆரத்தி எடுக்காதது குறை! மற்றபடி பூஜா ஹெக்டேவை கொண்டாடி வருகின்றனர்.
பூஜா ஹெக்டே இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு தமிழில் சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்து வந்தார்.
Also Read | தல அஜித்தின் நாங்க வேற மாதிரி பாடல் சாதனை படைத்துள்ளது
"தற்போது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் (Nelson dhilip kumar) நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட்(BEAST) படத்தை இயக்கி வருகிறார். விஜய்க்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிக்க உள்ளார். பீஸ்ட் படத்தினை சன் பிக்சர்ஸ் (Sun pictures) நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.பீஸ்ட் படத்தினை அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது.
இந்நிலையில் பூஜா ஹெக்டேவிடம் "தென்னிந்திய நடிகர்களுடன் நீங்கள் யாருடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறீர்கள் என செய்தியாளர்கள்(Reporters) எழுப்பிய கேள்விக்கு பூஜா ஹெக்டே சட்டென்று யோசிக்காமல் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) நடிப்பதை தன் வாழ்நாள் பெருமையாகவும்,பாக்கியமாகவும் கருதுகிறேன். என நச்சென்று பதில் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பீஸ்ட் படத்தின் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் (First look) போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.!
ஈடுயில்ல எவனும் அதுக்கு எங்க "தளபதி தான் வரனும்.!
Also Read | கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR