Independence Day 2022: நாட்டை நேசிக்கிறேன் அரசாங்கத்தை அல்ல - மத்திய அரசை சீண்டிய பி.சி.ஸ்ரீராம்
நான் நாட்டைத்தான் நேசிக்கிறேன் அரசாங்கத்தை அல்ல என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஒன்பதாவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நான்கு ஹெலிகாப்டர்களில் இருந்து தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றினார். அதேபோல் நாடு முழுவதும் இருக்கும் அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இதற்கிடையே 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க வேண்டுமெனவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் மோடி. இதனையடுத்து தமிழகத்தில் ரஜினி, விஜய், பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலரின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதேபோல் மக்களும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர்.
அதேசமயம், நாடு மீது அனைவருக்கும் பற்று இருக்கிறது. ஆனால் இந்த நாட்டை ஆளும் பாஜக அரசுக்குத்தான் நாடு மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
இந்நிலையில் இந்திய அளவில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நாட்டை விரும்புகிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல. ஜெய்ஹிந்த்” என பதிவிட்டுள்ளார். தற்போது அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | Independence Day 2022: பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ