மாணவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்க்கிறேன் - கமல்ஹாசன்
மாணவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிகட்டு தடைக்கு எதிராகவும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது ஒட்டுமொத்த தமிழினமே ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கிறது. அவர்களின் போராட்டத்தை கலங்கிய கண்களோடு பார்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
உலகமே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது, தமிழர்கள் இந்தியாவை பெருமைப்பட வைத்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். உங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள். இந்த தருணத்தில் போராட்டத்தின் வித்துக்களாக மாறிவிட்டோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். நான் பார்ப்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன் ஒருபோதும் வன்முறையை நாட வேண்டாம் என்றும், நம் போராட்டம் வெற்றியின் களிப்பில் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.