தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட இவர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் 'உப்பென்னா'. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.


இப்படம் கொரோனா சூழலிலும் 100 கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்தது. இதில், ஹீரோயினாக நடித்த கீர்த்தி ஷெட்டி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.மேலும் இவர் பரதநாட்டிய கலைஞராவார்.குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்ட கீர்த்தி, கலர்ஃபுல்லாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.



இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். ஏனெனில் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR