காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று  நேற்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா என்பவர் துணை வேந்தராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்தார். இதற்க்கு தமிழக முழுவதும் பல தரப்பில் இருந்து கண்டனக்குரல்கள் எல்;எழுந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அ.தி.மு.க-வின் உண்ணாவிரதம் போலியானது -கமல்!


இந்நிலையில், இதைக்குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் கூறியதாவது:-


‘’கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.


இதோ புதிய தோற்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்!



 


கடந்த 4-ம் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்ற கமல்ஹாசன், திருச்சியில் வகிக்கும் டிராபிக் போலீஸ் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இறந்த உஷாவின் அம்மா மற்றும் அவரது சகோதரருக்கு ஐந்து லட்ச ரூபாயும், உஷாவின் கணவருக்கு ஐந்து லட்ச ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.