Idhayam Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி ஆதியிடம் வேலைக்கு போக போவதாக சொல்ல ஆதி எதுக்கு பாரதி இதெல்லாம் என்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, பாரதி நான் வேலைக்கு போக தான் போறேன், நான் சம்பாதிக்கிற பணத்துல தான் தமிழை படிக்க வைக்க போறேன், உங்க குடும்பத்துகிட்ட நான் சேலஞ் பண்ணி இருக்கேன் என்று சொல்லி கிளம்ப ஆதி சரி போறதுதான் போறீங்க.



போயிட்டு வரேன்னு சிரிச்சிட்டு சொல்லிட்டு போங்க.. இப்படி உர்ருனு உங்க முகத்தை பார்க்க முடியல என்று சொல்ல பாரதி சும்மா சிரிப்பது போல் முகத்தை காட்டி போதுமா என்று கேட்க ஆதி இதுக்கு நீங்க சிரிக்காமலேயே இருந்து இருக்கலாம் என்று சொல்கிறான். 


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா?


அதன் பிறகு பாரதி ஸ்கூட்டியில் இன்டெர்வியூக்கு கிளம்பி செல்ல ஆதி காரில் ஆபிஸ் கிளம்பி செல்கிறான். பாரதி வழியை விசாரித்து ஒரு வழியாக கம்பெனிக்கு வந்து சேர இண்டெர்விவுக்கு உள்ளே அழைக்கின்றனர். உள்ளே வந்த பாரதி அங்கு ஆதியும் ஸ்வேதாவும் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி கிளம்ப ஸ்வேதா அவங்களுக்கு நம்ம கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாது என்று நக்கல் அடிக்க ஆவேசமாகும் பாரதி நான் இந்த கம்பெனியில் ஜாயின் பண்றேன். இன்டெர்வியூ பண்ணுங்க என்று ரெஸிமை கொடுக்கிறாள். 



லஞ்ச் முடித்து வந்து பாருங்க என்று சொல்லி ஆபிஸர்ஸ் வெளியே கிளம்ப ஆதி பாரதியை பிடித்து ரொமான்ஸ் செய்ய இங்க நான் வேலை தேடி வந்திருக்கேன், நீங்க இங்க பாஸ் என்று தள்ளி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: அபியின் துணியை கிழித்த மனோகரி.. ஆவேசமான இந்து, அடுத்து நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ