நினைத்தேன் வந்தாய் அப்டேட்: அபியின் துணியை கிழித்த மனோகரி.. ஆவேசமான இந்து, அடுத்து நடந்தது என்ன?

Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 5, 2024, 01:49 PM IST
  • நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்.
  • போட்டிக்கு தயாராகும் அபி.
  • சவால் விடு மனோகரி.
நினைத்தேன் வந்தாய் அப்டேட்: அபியின் துணியை கிழித்த மனோகரி.. ஆவேசமான இந்து, அடுத்து நடந்தது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கண்ணை மூடி கொட்டி கிடக்கும் பெயிண்டை வைத்து தனது கையால் அம்மா போட்டோவை வரைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கவின் அம்மாவை வரைந்து இருப்பதை பார்த்து எல்லாரும் ஆச்சரியமடைய எழில் ஓடி போய் அவனை கட்டி பிடித்து முத்தமிட்டு கண் கலங்குகிறான், இதனை தொடர்ந்து எழிலை பார்த்து விடும் டீச்சர் ஒருவர் மீண்டும் மீண்டும் வந்து அவனிடம் பேசி வழிய இதை இந்து பார்த்து விடுகிறாள். 

போட்டிக்கு தயாராகும் அபி

என் புருஷன் கிட்டயா வழிய வழிய பேசுற என்று கோபப்பட்டு தீபாவை வைத்து டீச்சருக்கு அடி கொடுத்து ஓட விடுகிறாள், அடுத்து அபி டிரஸ் கம்பிட்டேஷனில் கலந்து கொள்ள தயாராகிறாள். இதற்காக செலக்ட் செய்து வைத்திருந்த ட்ரஸ்ஸை மனோகரி கத்தரி வைத்து கிழித்து விடுகிறாள். இதை அஞ்சலி பார்த்து விடுகிறாள். 

பிறகு அபியின் டிரஸ் கிழிந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக அஞ்சலி மனோகரி ஆண்ட்டி தான் ட்ரெஸ்ஸ கிழிச்சாங்க, நாம  ஜெயிக்க கூடாதுனு தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்ல இந்து சுடரிடம் அந்த ட்ரெஸ்ஸை நான் சொல்ற மாதிரி தைக்க சொல்ல சுடரும் அப்படியே தைக்கிறாள். 

மேலும் படிக்க | Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..

சவால் விடு மனோகரி

மனோகரி அபி மேடை ஏற மாட்டா, அப்படியே ஏறினாலும் கிழிந்து போன துணியுடன் தான் ஏறுவா என்று சொல்லி கொண்டிருக்க அபி மேடை ஏற எல்லாரும் அவளது ட்ரெஸ்ஸை பார்த்து வாவ் என்று வாயை துறக்கின்றனர். இதனால் மனோகரி ஷாக்காகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்கு நடிகர் ரஜினி காரணமாம்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News