வெளியானது ‘இது வேதாளம் சொல்லும் கதை’ டீசர்!
இயக்குனர் ரதீந்த்ரன் பிரசாத் இயக்கத்தில், அஸ்வின் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’. இத்திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இப்படத்தில், அஸ்வின் ககமனு, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஹாலிவுட் நடிகர் கிரபுரிட்ஜ், லெஸ்ஸி திரிபாதி, அக்னீஸ்வர் அன்பு, கனிகா குப்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.
வாகைசூடவா புகழ் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ராபர்டோ சாசாரா ஒளிப்பதிவு செய்கின்றார்., பி.கணேஷ், ரதீந்த்ரன் பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர்.