ரேடியோவில் இருந்து வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அமர்ந்தவர் மிர்ச்சி சிவா.  இவரை திரையில் பார்த்தாலே மக்களுக்கு சிரிப்பு வரும் அளவிற்கு தனக்கே உரிய படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.  மற்றவர்களை கிண்டல் செய்தால், அவர்களுக்கே சிரிப்பு வரும் அளவிற்கு காமெடி செய்வதில் சிவா வல்லவர்.  முன்னதாக சுந்தர்சி இயக்கத்தில் இவர் நடித்திருந்த கலகலப்பு, அமுதன் இயக்கத்தில் வந்த தமிழ் படம் 1 மற்றும் 2 போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.  தற்போது நகைச்சுவை படங்களுக்கு பெயர் போன ராம்பாலா இயக்கத்தில், சிவா நடித்துள்ள இடியட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  ராம்பாலா இதற்கு முன்னர் சந்தானத்தை வைத்து தில்லுக்குதுட்டு 1 மற்றும் தில்லுக்குதுட்டு 2 போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் பேசப்படாத கதை! செல்ஃபி திரைவிமர்சனம்!


 


நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய இடியட் படம், சில சூழ்நிலைகள் காரணமாக தற்போது வெளியாகி உள்ளது.  இப்படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, அக்சரா கௌடா, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா, ரெடின் கிங்ஸ்லி, கிரேன் மனோகர் என பல நகைச்சுவை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பேய் படங்களின் கதை தான் இடியட் படத்தின் கதையும்.  ஹீரோ மற்றும் அவரது குரூப் ஒரு பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறது, அதிலிருந்து எப்படித் தப்பித்து வருகிறார்கள் என்பதே படத்தின் கதை.  பேய் படங்களை பயந்து பார்த்த காலம் போய், பேய்களை வைத்து காமெடி செய்யும் ஒரு புதிய உத்தியை கொண்டுவந்தவர் ராம் பாலா.  இதற்கு முன்பு வெளியான தில்லுக்குதுட்டு 1 மற்றும் தில்லுக்குதுட்டு 2 ஆகிய படங்களில் பேயை வச்சு செய்த ராம் பாலா இந்தப் படத்திலும் அதனை தொடர்ந்துள்ளார். 



அதுவும் சிவாவை வைத்து ராம்பாலா செய்துள்ள சம்பவங்கள் இடியட் படத்தில் ஏராளம்.  சிவா பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் திரையரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.  சிவாவிற்கும் ஆனந்தராஜ்க்கும் இடையே நடக்கும் காட்சிகளில் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பலைகள் ஏற்படுகிறது.  இரண்டாம் பாதியில் சிவா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இணைந்து எலி, பூனையை கண்டுபிடிக்கும் காட்சி மிக பிரமாதம்.  குனிந்து இருந்தால் மந்திரி ஆகிவிடலாம், காலை பிடித்தால் கட்சியில் பதவி போன்ற அரசியல் சார்ந்த வசனங்களுக்கும் விசில் பறக்கிறது.  முதல் பாதியில் வரும் கபடி காட்சி, மருத்துவமனையில் நடக்கும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகள் என எல்லா இடத்திலும் இயக்குனர் ராம் பாலா ஸ்கோர் செய்கிறார்.  



லாஜிக்கை மறந்து திரையரங்கிற்கு வரும் அனைவரும் 2 மணி நேரம் சிரித்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே ராம்பாலா இக்கதையை உருவாக்கியுள்ளார்.  படத்தில் வரும் ஜோக்ஸ் எல்லாமே ஏற்கனவே வெளிவந்த பழைய ஜோக்குகள் என்றாலும், அதனை அந்தந்த கதாபாத்திரங்கள் அந்தந்த சிச்சுவேஷனில் பேசும்போது மேலும் சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சில படங்கள் திரையரங்கில் பார்த்தல் மட்டுமே பிடித்து போகும், அந்த வகையில் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து ஒரு ரோலர் கோஸ்டர் ரெய்டு போல இடியட்டை இரசிக்கலாம்.


மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR