இந்தியாவின் 2_வது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இளையராஜாவின் இசைக்கென தனி மரியாதை உண்டு. இளையராஜாவின் இசைக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். 


குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்மவிபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


விருது அறிவிக்கப்பட்டதை குறித்து இளையராஜா கூறிகையில், 


மத்திய அரசின் விருதை ஏற்றுக்கொள்கிறேன். இது மத்திய அரசு எனக்கு கொடுத்து கெளரவித்ததாக நான் நினைக்கவில்லை. தமிழகத்தையும் தமிழக மக்களையும் கெளரவித்ததாக நினைக்கின்றேன் என்றும், விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வேன் என மத்திய அரசிடம் கூறி உள்ளேன் எனவும் கூறினார்.


பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


கடந்த 2010-ம் ஆண்டு பத்மபூஷன் விருது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.