ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாரா படத்தின் தேதி அறிவிப்பு
நயன்தாரா நடித்துள்ள ஓ2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளித்திரை லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, கைவசம் இருந்த படங்களின் சூட்டிங்கை முடித்த கையோடு நீண்ட கால காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற அவர்களின் திருமணம் இந்திய அளவில் திரும்பிப் பார்க்கப்பட்டது. பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான திரைப்பிரபலங்கள் இவர்களின் திருமணத்தில் பங்கேற்று நட்சத்திர தம்பதியை வாழ்த்தினர். குறிப்பாக, பாலிவுட் பாஷா ஷாருக்கான் நேரில் வந்து வாழ்த்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரைப்பிரபலங்கள் நேரில் சென்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தினர். இதனால், ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரம் களைக்கட்டியது.
மேலும் படிக்க | மீண்டும் மாறியது மாமனிதன் ரிலீஸ் தேதி
இதனைத் தொடர்ந்து கேரளா சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன், நயன்தாராவின் சொந்த ஊருக்கு சென்று கோவிலில் வழிபட்டனர். இந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 17 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என படக்குழு எதிர்பார்ப்பில் உள்ளது. இதுகுறித்து பேசிய அறிமுக இயக்குநர் விக்னேஷ், படத்துக்கு நயன்தாரா உயிர் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
மேலும் படிக்க | விஜய்காக கதை ரெடியாக வைத்திருக்கும் தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குநர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR