‘சோழர்களே உங்களுக்கு அவ்வளவுதான்` - எச்சரிக்கை விடுத்த பாண்டியர்கள்... மதுரையில் கலகலப்பு
சோழர்களை எச்சரிக்கிறோம் என மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளன.
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் படத்தை மணிரத்னம் எடுத்திருப்பதால் பொன்னியின் செல்வன் எப்படி உருவாகியிருக்கும் என்பதை காண்பதற்கு பலரும் ஆவலாக இருந்தனர். அதுமட்டுமின்றி அதுவரை பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்காதவர்கள்கூட புத்தகத்தை வாங்க தொடங்கினர்.
புத்தகத்தை படிக்காதவர்கள் இப்படி என்றால் புத்தகத்தை படித்தவர்களோ, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மணிரத்னத்தின் மேக்கிங்கை தொடர்புப்படுத்தி பேசிவந்தனர். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் புத்தகத்தை பலர் படிக்கும்படியாக ஏகப்பட்ட மீம்ஸ்களும் உருவாகின. இதனால் கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளங்கள் முழுவதும் பொன்னியின் செல்வனே ஆக்கிரமித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் தொடர்பான சமூக வலைதள அதகளங்களிலேயே முக்கியமானது சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் என நெட்டிசன்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதுதான். இதற்கிடையே பொன்னியின் செல்வனை கூல் சுரேஷ் குதிரையில் வந்து பார்த்தது தனிக்கதை.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் அதகளங்களில் அடுத்தக்கட்டமாக மதுரையில் ஒட்டப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று உலா வருகிறது. அதில், ”சோழர்களே பாண்டிய நாட்டுக்கு வந்தோமா மீனாட்சியை கும்பிட்டோமா, தியேட்டர்ல படத்த ஓட்டுனோமா, புரோட்டாவா திண்டோமானு போய்கிட்டே இருக்கணும்.. அத விட்டுட்டு மறுபடியும் எதாவது எசகு பிசகு பண்ணனும்னு நினைச்சீங்க அவ்ளோதான்! எச்சரிக்கை கலந்த வாஞ்சையுடன் அழைக்கும் எஸ்.ஆர்.கே. ஆனந்த்” என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று ரிலீஸானது. படத்துக்கு பலரும் வரவேற்பை அளித்துள்ளனர். மேலும் படம் வெளியான முதல் நாளான நேற்று மட்டும் 80 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata