Indian 2 OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம் இந்தியன் 2. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம், ரிலீஸிற்கு பிறகு நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் 2 திரைப்படம்:


1996ஆம் ஆண்டு உருவாகி ரசிகர்களை கவர்ந்த படம், இந்தியன். கமல்ஹாசன் சேனாபதி மற்றும் சந்துரு என தந்தை-மகன் வேடத்தில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமன்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது. ஷங்கருக்கே உரிய பிரம்மாண்டம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையால் படத்திற்கு பலமும் சேர்ந்தது. இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தன. படப்பிடிப்பில் விபத்து, படக்குழுவில் ஒரு சிலரின் மரணம் என எதிர்பாராத சில சம்பவங்களால் படப்பிடிப்பும், பிற பணிகளும் தள்ளிப்போயின. ஒரு வழியாக சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு, ரிலீஸிற்கு தயாரானது இந்தியன் 2. 


கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், பார்த்தவர்களை “என்னடா அக்கப்போறு இது..” என்று கேட்கும் அளவிற்கான காட்சிகளை கொண்டிருந்ததாக கூறப்பட்டது. அதைவிட, 102 வயதாகும் இந்தியன் தாத்தா, எப்படி இப்படி பறந்து பறந்து சண்டையிடுகிறார் என்பதும் ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது. இதை தவிர்த்து, பிரியா பவானி சங்கரின் நடிப்பின் மீதும், சித்தார்த்தின் கதாப்பாத்திரம் மீதும் ரசிகர்கள் வெறுப்பு மழையை பொழிந்தது. படம் வெளியாகி 3 நாட்களுக்குள்ளாகவே தியேட்டர் டல் அடிக்க ஆரம்பித்தது. 


மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?


ஓடிடியில் ரிலீஸ்:


சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் யாவும், வெகு விரைவிலேயே ஓடிடியிலும் ரிலீஸாகி விடுகின்றன. அந்த வகையில், இந்தியன் 2 திரைப்படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் அதிகம் பேர் பயன் படுத்தும் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் இந்தியன் 2 வெளியாகவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இருந்த இந்தியன் 1 திரைப்படம், பின்பு நெட்ஃப்ளிக்ஸிலும் காண கிடைத்தது. இதையொட்டி, இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையையும் அந்த தளம் கைப்பற்றியிருக்கிறது. 


எப்போது ரிலீஸ்?


இந்தியன் 2 திரைப்படம், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓடிடியில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து தியேட்டர்களிலும் 2 அல்லது 1 காட்சி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பல தமிழ் புது படங்கள் வெளியாக இருப்பதால், இந்தியன் 2 படத்திற்கு வரும் கூட்டம் இன்னும் குறையா வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதை திரையரங்குகளில் பார்க்க தவறி விட்டால், ஓடிடியில் விரைவில் பார்க்கலாம் என மக்கள் கணக்கு போட்டு வருகின்றனர். 


இந்தியன் 3:


ஷங்கர், இந்தியன் 2 படத்தையே 5 மணி நேரத்திற்கு எடுத்துவிட்டு அதை இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் இறுதியில் அதன் அடுத்த பாகத்திற்கான டிரைலரும் வெளியானது. இதில், சேனாபதியின் இளமை காலம் காண்பிக்கப்பட இருப்பதாகவும் இதில் காஜல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.


மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ