இந்தியன் 2 ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் வெளியாவது எப்போது தெரியுமா?
Indian 2 Release Date : கமல் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்தியன் 2:
கிட்டத்தட்ட 6 வருட காலமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக, இப்படம் உருவாகி இருக்கிறது. முதல் படத்தில் தந்தை-மகன் என இரு கதாப்பாத்திரங்களில் கமல், இந்த பாகத்தில் சேனாபதி என்ற அதே ‘தாத்தா கமல்’ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தியன் 2 படம், கிட்டத்தட்ட முதல் பாகம் ரிலீஸாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாவதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த டீசர் அதற்கேற்ற வகையில் சரியான வரவேற்பை பெறவில்லை. ஷங்கரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்ததாகவும் அதில் பாதி சதவிகிதம் கூட நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தனர்.
பலரை காவு வாங்கிய படம்...
இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்ச்னை கிளம்பியது. முதலில் படத்தின் கதையினால் கமல் ஹாசனுக்கும் ஷங்கருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த காரணத்தால் படப்பிடிப்பில் சில காலம் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் தயாரிப்பிலும் சர்ச்சைகள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி, இந்த படத்தில் நடித்த நடிகர்களும் இறந்து போயினர்.
படப்பிடிப்பில் விபத்து..
2020ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில், 3பேர் உயிரிழந்தனர். இது, திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | விஜய்யின் தாயுடன் பிக்பாஸ் வனிதா மற்றும் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்..
அடுத்தடுத்த உயிரிழப்புகள்:
நடிகர் விவேக், முதல் முதலில் கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். கொரோனா அலைக்கு பிறகு, 2021ஆம் ஆண்டில் மாரடைப்பு காரணமாக ஊயிரிழந்தார். இப்படம் முடிவடைவதற்குள் இவர் உயிரிழந்த விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக்கை தொடர்ந்து, காமெடி நடிகர் மனோபாலாவும் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அடுத்து இப்படத்தில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்துவும் உயிரிழந்தார். இப்படி நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், இது சபிக்கப்பட்ட படம் என்றும் கூறப்பட்டது.
இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது:
இந்தியன் 2 திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பாகம், இந்த ஆண்டும் அடுத்த பாகம் 2025ஆம் ஆண்டிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரஜினி, கமல் to விஜய், அஜித்-பொது இடத்தில் கோபப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ