ரஜினி, கமல் to விஜய், அஜித்-பொது இடத்தில் கோபப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்!

திரை பிரபலங்கள் பலர், பொது இடத்தில் தங்களையும் மீறி பல சமயங்களில் கோபப்பட்டிருக்கின்றனர். அந்த சம்பவங்களையும், அவர்கள் கோபப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு பார்க்கலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 6, 2024, 06:10 PM IST
  • பொது இடத்தில் கோபப்பட்ட பிரபலங்கள்
  • விஜய் முதல் ரஜினிகாந்த் வரை
  • இந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
ரஜினி, கமல் to விஜய், அஜித்-பொது இடத்தில் கோபப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள்! title=

பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சினிமா, துறைகளில் உள்ளவர்களுக்கு அதிகளவிலான ரசிகர் கூட்டம் இருக்கும். அப்படி, ஒரு கூட்டத்தில் இருக்கும் போது, பெரும்பாலான சமயங்களில் அனைத்து பிரபலங்களும் தங்களது உணர்வுகளை கட்டுக்கோப்பாகத்தான் வைத்துக்கொள்வர். ஆனால், ரசிகர்களின் சிலரின் அத்துமீறல்களால் அவர்கள் சில சமயங்களில் பொறுமையிழப்பதுண்டு. அப்படி, அவர்கள் கோபப்பட்ட தருணங்களையும், கோபப்பட்ட பிரபலங்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.

சரண்யா பொன்வண்ணன்:

பொது இடத்தில் கோபப்பட்ட பிரபலங்களின் லிஸ்டில் சமீபத்தில் சிக்கியவர், சரண்யா பொன்வண்ணன். பல படங்களில் தாய் வேடங்களில் நடித்த தமிழக மக்களுக்கு ஃபேவரட் ஆன இவர், பக்கத்து வீட்டுக்காரருடன் பார்க்கிங்கிற்காக சண்டை போட்டிருக்கிறார். இவர்களின் வாய்ச்சண்டை பெரிதளவில் உருவெடுக்க, சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, அவரது அண்டை வீட்டுக்காரர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | தனுஷ் உடன் 6 வருடம் பேசாத ஜி.வி.பிரகாஷ்! காரணம் என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி:

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு நடிகர் விஜய் சேதுபதியும், மகாகாந்தியும் ஒன்றாக பயணம் செய்தனர். அப்போது, இவர்களுக்குள் ஏதே வாக்குவாதம் எழ, உடனே விஜய் சேதுபதியின் உதவியாளர்கள் மகா காந்தியை அடித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் பெங்களூரு விமான நிலையத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியாேவும் இணையத்தில் வைரலானது. 

அஜித் குமார்:

நடிகர் அஜித்குமார், ப்ரைவசியை விரும்பும் பிரபலங்களுள் ஒருவர். 2021ஆம் ஆண்டில் நடைப்பெற்ற தேர்தலில் வாக்களிக்க தனது மனைவியுடன் வந்த அஜித்தை ஒரு ரசிகர் போட்டோ எடுத்து விட்டார். அப்போது கடுப்பான அஜித், அந்த ரசிகரின் போனை பிடுங்கி கொண்டார். பின்பு அந்த ரசிகரை இது போன்று செய்யக்கூடாது என்று எச்சரித்துவிட்டு போனை திரும்பி கொடுத்தார். சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்த போது, இவரை ஒரு ரசிகர் போட்டோ எடுத்துவிட்டார். அப்போதும் அஜித் அந்த ரசிகரின் போனை வாங்கி அந்த போட்டோக்களை டெலிட் செய்து விட்டு திரும்பி கொடுத்தார்.

Celebrities

நயன்தாரா-விக்னேஷ் சிவன்:

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம். ஒரு முறை இவர்கள் தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்ற போது அங்கிருந்த மக்கள், இவர்களை நோக்கி கூச்சலிட்டதால் இவர்கள் கடுப்பாகினர். அதன் பிறகு அவர்கள் அந்த கோயிலுக்கு செல்லவேயில்லை. 

நடிகை ராதா:

சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா, தனது ஏரியாவில் இருந்த ஒரு இளைஞர் தன்னிடம் தகாத முறையில் பேசியதால் அவரை தனது மகனுடன் சேர்ந்து ரோட்டில் வைத்து அடித்தார். இது பெரிய பிரச்சனையாக வெடித்தது. 

ரஜினி:

2018ஆம் ஆண்டு, நடிகர் ரஜினி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளால் கடுப்பானார். இதனால் அந்த சந்திப்பின் பாதியிலேயே அங்கிருந்து சென்று விட்டார். 

கமல்ஹாசன்:

நடிகர் கமல்ஹாசன், ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது மைக் வேலை செய்யாததால் கடுப்பாகி கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை தூக்கிப்போட்டார். அவர் வைத்திருக்கும் ‘மக்கள் நீதி மையம்’ அரசியல் கட்சியின் சின்னமே அந்த டார்ச்லைட்தான். அதை அவர் தூக்கியெறிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய்:

‘வில்லு’ படம் குறித்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது நடிகர் விஜய், பததிரிகையாளர்களை நோக்கி “சைலன்ஸ்” என கத்தியது அப்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | விஜய்யின் தாயுடன் பிக்பாஸ் வனிதா மற்றும் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News