நடுரோட்டில் நடிகைக்கு செக்ஸ் டார்சர் கொடுத்த இளைஞன்!
நடுரோட்டில் நடிகையின் பாவடையை பிடித்து இழுத்து செக்ஸ் டார்சர் கொடுத்த இளைஞர்கள்.
நடிகைகள் சமீப காலமாக தனைகளுக்கு நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் தைரியமாக சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியே கூறி வருகின்றனர். எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை செய்திகள். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருந்தாலும், பெண்கள் மீதான் வன்கொடுமைக்கும் தூக்கு தண்டனை கொடுங்கள் என்று பெண்கள் அமைப்பினர் கூறுகின்றனர்.
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய நாளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.
பல நடிகைகளை தொடர்ந்து தற்போது வட இந்தியாவை சார்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை ஆகாஷி ஷர்மா-வுக்கும் இது போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தொலைக்காட்சி நடிகையான இவர் ஆக்டிவாவில் சென்று கொண்டிருந்த போது, அவர் அருகில் பைக்கில் வந்த இரண்டு பேர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். நடிகை அணிந்திருந்த ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து, உள்ளே என்ன இருக்கிறது... காட்டு என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை, அதனை தடுக்க முயன்றார். அப்போது அவர், ஆக்டிவாவில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.இந்த சம்பவம், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த போதும் யாரும் உதவ முன் வரவில்லையாம். இதற்கிடையில் அந்த நபர்கள் தப்பியோடி விட்டனர். அந்த நடிகை காயமடைந்த தனது காலை புகைப்படும் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.