அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான American Idol -ல் பங்கேற்க வந்த இந்திய வம்சாவழி இளம்பெண், நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவரையும் தனது இசை திறமையால் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

American Idol, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்படும், செல்லக் குரலுக்கான ரியாலிட்ட நிகழ்ச்சி. பிரபலத்திற்கு ஏற்றார் போல் இந்நிகழ்ச்சியில் சர்சைகளுக்கும் பஞ்சம் இல்லை.


சமீபதில் இந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான கெட்டி பெர்ரி, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 19-வயது பாடகருக்கு உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சைக்குள்ளானார்.


இந்நிலையில் தற்போது இந்தியாவின் வம்சாவழியை சேர்ந்த 15-வயது அலியஸா ரகுந்தன் என்பவர் தனது இசை திறமையால் நடுவர் கெட்டி பெர்ரியை ஆனந்த கண்ணீரில் ஆய்த்தியுள்ளார். 


அலியஸா-வின் பாடலை கேட்டு மெய் மறந்த நடுவர்கள் அவருக்கு நேரடி ஹாலிவுட் டிக்கெட்டினையும் வழங்கியுள்ளனர். இந்தியாவை சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சில் பங்கேற்று தனித்துவம் பெருவது இது முதல் முறை அல்ல, எனினும் அலியஸா மிக குறிகிய வயதிலேயே இந்த பெருமையினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.