பிரபல தென் இந்திய நடிகையான பூஜா ஹெக்டே தமிழ், தெழுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகினார். அதையடுத்து தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020ல் வெளியான அல்லு அர்ஜூனின் "அலா வைகுண்டபுரமுலோ" எனும் தெலுங்கு திரைப்படத்தில் உலகம் முழுவதும் பிரபலமானார். ஆனால் அதற்கு பின்பு கொடுத்த ராதே ஷியாம், பீஸ்ட் ஆகிய படங்களில் அவரது அதிர்ஷ்டம் சற்று சரியத்தொடங்கியது. 



மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!


இருப்பினும் 2 ஹிந்தி படங்களை கையில் வைத்துக்கொண்டிருக்கும் இந்த இளம் நடிகைக்கு இன்று தேவையில்லாத பிரச்சனை வந்து சேர்ந்துள்ளது.


இன்று அவர் இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது நடந்த மோசமான அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இண்டிகோ விமானத்தின் ட்விட்டர் பக்கத்தையும் அவர் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.


அவரது அந்த பதிவில், இன்று இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். அப்போது அந்த விமானத்தில் பணிபுரியும் விபுல் நக்கஷே என்ற விமான பணியாளர் ஒருவர் எங்களிடம் தன்மையாக நடந்துகொள்ளவில்லை. அவர் அவ்வாறு சரியான முறையில் நடந்துகொள்ளாமல், முரட்டுத்தனமாக எங்களை நடத்தியது மிகவும் வருத்தமளிக்கிறது.


அதுவும் எந்த காரணமும் இன்றி ஆணவத்துடனும், அலட்சியத்துடனும் அவர்  நடந்துகொண்டார். மேலும், அவரது பேச்சு மிகவும் அச்சுறுத்தும் தொனியில் இருந்தது. வழக்கமாக நான் இதுபோன்ற விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடமாட்டேன். ஆனால், அந்த விமான பணியாளரின் செயல், இன்று உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது. வேறு வழியின்றி இது குறித்து பதிவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


 



மேலும் படிக்க | கொரோனா பாதித்த ஷாருக்கான் நயன்தாரா மேரேஜில் கலந்துகொண்டது எப்படி?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR