கடந்த 2012ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பின்னர் தெலுங்கு , இந்தி என பிஸியாக இருந்தவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
அந்த வகையில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். கைவசம் தெலுங்கு மற்றும் இந்தி என சில படங்களை வைத்துள்ளார் பூஜா ஹெக்டே. அதில் ஒன்று- இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜன கன மன. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது.
பூஜாவைப் பொறுத்தவரை தென் இந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பாப்புலர் ஆன நடிகையாக உள்ளார். இதனால் அவருக்கான சம்பளமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாம். அந்த வகையில், விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கவுள்ள இப்படத்தில் அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | நயன்தாரா எனும் நம்பிக்கை நாயகி! - நயனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?!
தென் இந்தியாவைப் பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதலிடத்தில் உள்ளார். 5 முதல் 7 கோடி வரை என அவர் சம்பளம் பெற்றுவருகிறாராம். அவருக்கு அடுத்தபடியாக நடிகை சமந்தா 3 முதல் 5 கோடி ரூபாய் வரை ஒரு படத்துக்குப் பெற்றுவருகிறாராம். இந்நிலையில் பூஜா ஹெக்டே 5 கோடி ரூபாய் பெறவுள்ளதாகக் கூறப்படுவதால் இந்தப் பட்டியலில் சமந்தாவின் இடத்தை அவர் பிடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | ‘ரஜினி-169’ படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்! - இயக்குநர் நெல்சன் நீக்கமா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR