நகைச்சுவை கலைஞர்களுள் தனி கவனம் பெற்றவர், ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். இவர், கடந்த சில மாதங்களாக உடல் மெலிந்து காணப்பட்டார். இதற்கு என்ன காரணம் என்பதை ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா சங்கர் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“அப்பாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது..”


ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி தமிழக கடலோர காவல்படை சார்பில் “போதையில்லா தமிழ்நாடு” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கலந்து கொண்டார். அப்போது தனது தந்தையின் குடிப்பழக்கம் குறித்து கூறினார். அப்போது, “எனது அப்பா கடந்த சில மாதங்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இப்போது அந்த பழக்கத்தில் இருந்து வெளிவந்து அதிலிருந்து தள்ளி இருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் புது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதனால் யாரும் இனி குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்..” என்று கூறினார். 


மேலும் படிக்க | Prithviraj Sukumaran: படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு பெரும் விபத்து..! அச்சச்சோ என்னாச்சு?


உடல் மெலிந்த ரோபோ சங்கர்:


சிரிப்பான பேச்சுக்கும் நகைச்சுவையான செயல்பாடுகளுக்கும் பெயர் போனவர் ரோபோ சங்கர். மிமிக்கிரி செய்து பிறரை சிரிக்க வைப்பது, உடல் மொழியினால் மக்களை மகிழ்விப்பது என பல வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைவரையும் ஈர்த்தார். பல நிகழ்ச்சிகளுக்கு முகமாக இருந்த இவர், டிவி நிகழ்ச்சிகளில் இருந்து மெல்ல மெல்ல வெள்ளித்திரைக்கு சென்றார். இவரை பெரிய உடலுடன் பார்த்து பழகிய மக்களுக்கு இவர் ஒல்லியாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பகீர் கிளப்பியது. 


இதுதான் காரணம்:


ரோபோ சங்கர், உடல் எடையை குறைப்பதற்காக கடந்த சில நாட்களாக சில பயிற்சிகளையும் டயட்டுகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது திடீரென அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது. இதனால்தான் அவரது உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. இந்த தகவலை ரோபோ சங்கரே ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரோபோ சங்கரின் மகளுக்கு திருமணம்? 


ரோபோ சங்தரின் மகள் இந்திரஜா சங்கர், விஜய்யின் பிகில் படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். பின்னர் அதிதி சங்கர் மற்றும் கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்திருந்தார். அடிக்கடி நடனமாடி இன்ஸ்டாவில் அதை வீடியோவாக வெளியிடுவது இவரது வழக்கம். சமீப காலமாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் “மாமா மாமா..” என யாரையோ வைத்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். இந்திரஜாவுடன் க்ளோசாக இருக்கும் அந்த நபர், ரோபாே சங்கரின் குடும்பத்தாருடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனால், இந்திரஜாவிற்கு விரைவில் திருமணம் என்ற வதந்தி எழுந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | Viral Video: குழந்தை கெட்-அப்பில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் ரோபோ சங்கர்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ