மிஹீகா பஜாஜை திருமணம் செய்துக் கொண்டார் ராணா டகுபதி
பிரபல நடிகர் ராணா டகுபதி தொழிலதிபர் மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. 2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ராணா டகுபதி. பாகுபலி படம் மூலம் மிகவும் புகழ் உச்சத்தை அடைந்தார். இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ராணாவுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ALSO READ | கண்ணை கவரும் ராணா டகுபதி மனைவியின் அசத்தலான வைரல் புகைப்படங்கள்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ராணா டகுபதி, ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்தார். மிஹீகா தனது காதலை ஏற்றுக்கொண்டதாக கூறி கடந்த மே மாதம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். தொடர்ந்து குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு கல்யாண தேதி முடிவு செய்யப்பட்டது.
ALSO READ | நடிகர் ராணா டகுபதிக்கு காதலி மிஹீகா பஜாஜுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது!
இந்நிலையில் நேற்று மாலை நடிகர் ராணா டகுபதி தனது காதலியான மிஹீகாவை கரம் பிடித்தார். இதில் டோலிவுட் பிரபலங்களான வெங்கடேஷ், சமந்தா உள்ளிட்டட பலர் பங்ககேற்றனர். ஹைத்ராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடீயோவில் திருமணம் நடைபெற்றது.
இன்று காலை திருமண கோலத்தில் ராணா டகுபதி இருக்கும் புகைப்படங்களும், மணப்பெண் மிஹீகா புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.