சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13 ஆம் தேதி ரிலீஸாகும் திரைப்பம் ’டான்’. கல்லூரி கலாட்டாக்களை கண்முன்னே கொண்டு வருவதற்கு இப்படம் தயாராக இருக்கிறது. சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா மற்றும் சிவாங்கி, பாலா என வெள்ளித்திரை, சின்னத்திரை பட்டாளங்களே நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கேஜிஎப் இயக்குநருடன் கூட்டணி போட்ட ஜூனியர் என்டிஆர் - அப்பேட் இதுதான்


சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். படத்தை எஸ்.கே புரொடக்ஷனுடன் தயாரித்த லைகா நிறுவனத்தினரும், தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டனர். கலகலப்பாக நடைபெற்ற இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் இப்போதைய டான் சிவகார்த்திகேயன் என புகழாரம் சூட்டினார். அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்தாலே அந்தப் படம் வெற்றி எனக் கூறிய அவர், அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பெறும் எனக் கூறினார். 



இதனைத் தொடர்ந்து டான் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் கடைசி சீனில் ‘பேசாம அரசியலுக்கு போயிருவோமா?’ என சிவகார்த்திகேயன் கேட்க, மிர்ச்சி விஜய் ‘நிறைய பொய்யெல்லாம் பேசுனும்பா’ என கூறுகிறார். காமெடிக்காக இந்த சீன் இருந்தாலும், டிரெய்லர் ஒளிபரப்பாகும்போது சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்திருந்தாராம். அப்போது, உதயநிதி ஸ்டாலின் சிவகார்த்திகேயனை பார்க்க, ‘சார் இதுக்கு நானெல்லாம் பொறுப்பில்ல சார், எல்லாமே டைரக்டர் தான் சார்’ என தெரிவித்தாராம். 



மேலும் படிக்க | ‘வசூல் மன்னன்’ என மீண்டும் நிரூபித்த விஜய்! - தொடர்ந்து 5ஆவது முறையாக ‘அந்த’ சாதனை!


டிரெய்லர் வெளியிடும்போது நீங்க என் அருகில் இருப்பீங்கனு முன்கூட்டியே தெரிந்திருந்தால், இந்த சீன மட்டும் வைக்காம இருந்திருப்போம் சார் என்றும் கூறினாராம். பின்னர், இந்த சம்பவத்தை நகைச்சுவையாக அப்படியே மேடையில் பேசினார் சிவகார்த்திகேயன். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தன்னை உதயநிதி ஸ்டாலினிடம் கோர்த்துவிட்டுவிட்டார், ஆனால், உதயநிதி ஸ்டாலின் நல்ல வேளையாக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என காமெடியாக சிவகார்த்திகேயன் கூறினார்.  


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR