பாலிவுட், ஹாலிவுட் என இரண்டிலும் பிரபலமானவர் நடிகர் இர்பான் கான். இவர் நடித்த அனைத்து படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீரா நாயர் இயக்கிய ஆங்கிலத் திரைப்படமான த நேம்சேக் கின் மூலம் இர்பான் கான்னுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.  இத்திரைப்படத்திற்குப் பின்னர், வெளிநாடுகளில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராகக் கான் பெயர் பெற்றார் நடிகர் இர்பான் கான்.


இந்நிலையில் இர்பான் கான் தற்போது ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 15 நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவர் தனக்கு ஒரு அரிய நோய் வந்திருப்பதாகவும், அது உறுதியானதும் நானே அறிவிக்கிறேன் என கூறியுள்ளார்.