Irumban Movie Release Today: நடிகர் யோகிபாபு நடித்துள்ள இரும்பன் திரைப்பட இயக்குனரின்  நிலுவை சம்பளத்தை மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் செலுத்தாவிட்டால், படத்திற்கு தடை விதிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. லெமுரியா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜூனியர் எம்.ஜி.ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில், இரும்பன் என்ற படத்தை இயக்குனர் கீரா  இயக்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (மார்ச் 10, 2023) இந்த படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின், கதை, திரைக்கதை, வசனம் போன்ற பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் சம்பளம்  வழங்குவதாக  கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | புஷ்பா 2: சமந்தாவுக்கு பதிலாக வசூலில் அள்ளுவாரா சாய் பல்லவி? அல்லு அர்ஜூனின் ஜோடி யார்?


ஆனால்,  16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்காமல் இருப்பதால், படத்தை திரையரங்கு, டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென, இயக்குனர் கீரா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை 17வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.புவனேஸ்வரி,  இயக்குனருக்கு வழங்க  வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மூன்று  நாட்களுக்குள் வழக்கின் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும், தவறினால் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என உத்தரவிட்டு  விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


மேலும் படிக்க | 'இந்தியன் 2’ சண்டைப் பயிற்சியாளர்களுடன் கமல்ஹாசன்: ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ