ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வரவுள்ள நிலையில், வெளிவந்துள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

RRR திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராம் சரணின் அடுத்த திரைப்படம் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.


மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்கும் ராம் சரணுக்கு இந்த திரைப்படம் மிகவும் ஸ்பெஷல். 


மேலும் படிக்க | RRR படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்


அது அப்பாவும் மகனும் நடிக்கும் திரைப்படம் என்பதால் மட்டுமல்ல, மிகவும் பிரம்மாண்டமான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு பிறகு வெளிவரும் ராம் சரணின் படம் இது என்பது முக்கியமானது.


2022 ஏப்ரல் 29, அதாவது இன்னும் இரு நாட்களில் திரையரங்குகளில் வரவிருக்கும் படம் அனைவரிடமும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆச்சார்யாவில், அனுஷ்கா ஷெட்டியும் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன.



முன்னதாக, ஆச்சார்யா படத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், ஆச்சார்யா திரைப்படத்தில் இருந்து காஜல் அகர்வால் நடித்த பகுதி நீக்கப்பட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்தார்.


 "முதல் ஷெட்யூலை முடித்த பிறகு, காஜலின் கதாபாத்திரத்தைப் பார்த்தேன், அது திருப்தியாக இருக்கவில்லை. ஒரு நட்சத்திர நடிகையின் கதாபாத்திரத்தை பெரிதாக்கும் அளவுக்கு திரைக்கதையில் இடமில்லை. எனவே இதைப் பற்றி மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் விவாதித்தேன், அவர் முடிவை என்னிடமே விட்டுவிட்டார். அதனால், இதைப் பற்றி நான் காஜலிடம் விளக்கினேன். அதை அவர் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு காஜல் அகர்வாலின் பாத்திரத்தை ஆச்சார்யாவிலிருந்து நீக்கிவிட்டோம். பூஜா ஹெக்டே ,ராம் சரணின் காதலி நீலம்பரியாக நடிக்கிறார், ஆச்சார்யாவில் சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை. இருப்பினும் லாஹே லாஹே பாடலில் காஜல் அகர்வால் இருப்பார்" என்று ஆச்சார்யா திரைப்பட இயக்குநர் கொரட்டாலா சிவா தெரிவித்திருந்தார்.



ஆனால், ஆச்சார்யாவின் ட்ரெய்லரில் கூட காஜல் அகர்வால் இல்லை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.  


தற்போது சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி ஒரு பாடலில் நடிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலையும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. 


லாஹே லாஹே பாடலில் நடிப்பது யார் காஜல் அகர்வாலா இல்லை அனுஷ்கா ஷெட்டியா என்ற கேள்விக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள்  மௌனம் காத்து வருகின்றனர்.


மேலும் படிக்க | சூர்யா தயாரிப்பில் துவங்கியது சூரரை போற்று ஹிந்தி ரீமேக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR