நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளார்கள் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் பாலா நந்தா மற்றும் பிதாமகன் என இரு படங்களை சூர்யாவினை வைத்து இயக்கியுள்ளார். இதில் நந்தா திரைப்படத்தில் சூர்யா மிகச் சிறப்பானதொரு நடிப்பினை வெளிப்படுத்தினார்.


இப்படம் வெளிவந்த பிறகு இதில் உள்ள சண்டைக்காட்சிகள் அனைத்தும் வேறோரு சூர்யாவை நம் கண் முன் நிறுத்தியது.இதற்கு பிறகு வரிசையாக சூர்யா ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


Also Read | மெல்போர்ன் திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யா பெயர் பரிந்துரை!


இதற்கு நேர்மாறான கதையம்சம் கொண்ட படம் தான் "பிதாமகன் நந்தாவின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் மற்றும் சூர்யாவை வைத்து பிதாமகன் படத்தினை இயக்கினார்.


 நந்தாவில் ஆக்சனில் கலக்கிய நடிகர் சூர்யா இப்படத்தில் அதற்கு நேர்மாறாக "காமெடியில் கலக்கியிருப்பார். அதுவும் லங்கா கட்டை உருட்டும் காட்சியெல்லாம் சூர்யா பின்னியெடுத்திருப்பார்.


இவ்விரு படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றக்கூடிய சூழ்நிலை அமையவில்லை.கடைசியாக 2018ஆம் ஆண்டு வெளியான நாச்சியார் படத்திற்கு பிறகு பாலா எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.அவர் இயக்கிய வர்மா திரைப்படமும் ஒரு சில பிரச்சினைகளால் வெளியாகமால் போனது.


Also Read | Suriya's Jai Bhim: ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம்


இந்த கொரோனா காலகட்டத்தில் பாலா மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தையினை தொடங்கினார்கள்.பேச்சுவார்த்தைக்கு பிறகு 2D நிறுவனத்துடன் ஒரு படத்தினை பாலா இயக்குவதாக தகவல் வந்துள்ளது.


இதற்கான நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள்,படப்பிடிப்பு இடங்கள் (Location) தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளாரா அல்லது தயாரிப்பு மட்டும் தானா என்பது விரைவில் தெரியவரும்.


இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Also Read | OTT-யில் மாஸ் காட்டும் சூர்யா; தொடர்ச்சியாக 4 படங்கள் ரிலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR