Mansoor Ali Khan Issue: மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனக்குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தான் அவர் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்த செய்தி தீயாய் பரவி வருகிறது. அந்த செய்தியின் பின்னணி என்ன என்பதை காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் மன்சூர் அலிகான் வில்லன் நடிகராக நடித்து பிரபலமானவர். அவரது வில்லங்கப்பேச்சு காரணமாக அவ்வப்போது ட்ரெண்ட் ஆவார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். இவர் பேட்டி ஒன்றில், திரிஷா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார். அதனால் இவருக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 


1996 சம்பவம்


இந்நிலையில், மன்சூர் அலிகான் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைதானவர் என்ற செய்தி பரவி வருகிறது. கடந்த 1996-ம் ஆண்டு மன்சூர் அலிகானின் உதவியாளராக இருந்த சினேகா சர்மா என்ற பெண் தன்னை மன்சூர் அலிகான் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரில்,  தான் ஒரு கன்னிப்பெண்ணாக இருந்ததாகவும் தன்னை ஹோட்டலுக்கு தன்னை அழைத்துச்சென்ற அவர், ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பகிரங்க குற்றச்சாட்டை கூறி இருந்தார்.


மேலும் படிக்க | விசித்ரா பேசியது இந்த நடிகரை பற்றி தானா? வலுக்கும் கண்டனங்கள்!


வழக்கு விவரம்


இதன் தொடர்ச்சியாக சினேகா சர்மாவுக்கு 1998-ல் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மீண்டும் மன்சூர் அலிகான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக இவர் அளித்த புகாரில் மன்சூர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கின் முடிவில் இவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதோடு, சினேகா சர்மாவுக்கு 3.5 லட்சம் ரூபாயும், அவரது பெண் குழந்தைக்கு 7 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.


மேல் முறையீடு செய்த மன்சூர்


இந்த நிலையில் தான் 1995-ல் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் சினேகா சர்மா தன்னுடைய மனைவி என்றும், அவரை தன்னுடை வாழ உத்தரவிட வேண்டும் என்றும் சிவ்சுரேஷ் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தது தெரியவந்தது. சினேகா வர்மாவுக்கு இவரும் 1994-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டது.


இந்த தகவலை அறிந்த மன்சூர் அலிகான் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். சினேகா சர்மா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்தார். சினேகா சர்மாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்ததால், தன்னை கன்னிப்பெண் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தது ஏமாற்று வேலை எனவும் தெரிவித்திருந்தார். பொய்யான புகாரை கூறி நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி தனது பெயரை கெடுத்துவிட்டதாகவும் மன்சூர் முறையிட்டிருந்தார்.


சினேகா சர்மா கொடுத்த வழக்கில் 12 ஆண்டுகள் மன்சூர் அலிகானின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதோடு, படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இதையெல்லாம் குறிப்பிட்டு சினேகா சர்மாவிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கால் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளானார் மன்சூர் அலிகான்


மேலும் படிக்க | நயன்தாராவுடன் நடிக்க நடிகர் ஜெய் வாங்கிய சம்பளம் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ