அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்தார். சூர்யா - ஜோதிகா சார்பில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இருவரும் கூட்டணி அமைத்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. சூர்யா 41 எனப் பெயரிடப்பட்டு, படத்தின் சூட்டிங்கும் தொடங்கியது. கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நெட்பிளிக்சில் உள்ள சிறந்த டாப் 5 வெப் சீரிஸ்கள்!


படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதலால் சூர்யா, சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதனை இணை தயாரிப்பாளர் திட்டவட்டமாக மறுத்தார். சூர்யா 41 திரைப்படத்தின் சூட்டிங் திட்டமிட்டப்படி நடைபெற்று முடிந்ததாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்றும் கூறினார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொங்கும் என கூறப்பட்ட நிலையில், அதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. 



மே மாதம் நிறைவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதற்குள் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா நடிப்பில் நடிக்க இருப்பதாகவும், வாடிவாசல் படத்திற்கான வேலைகளை சூர்யா தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 41 படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் படம் ஒருவேளை கைவிடப்படுகிறதோ என்ற சந்தேகமும் திரைத்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 


மேலும் படிக்க | டி.ராஜேந்தர் உடல் நிலை - சிம்பு பரபரப்பு அறிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR