சிவா இயக்கத்தில் வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்தையடுத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தனது 169ஆவது படத்தை நடிக்கவிருக்கிறார் ரஜினி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்சனின் முந்தைய படமான விஜய்யின் பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் இப்படத்தின் மீது மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம் ரஜினி. எப்படியாவது இதனை ஹிட்டாகக் கொடுத்துவிட வேண்டும்  என முடிவெடுத்துள்ள ரஜினி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துவருகிறாராம்.


 அந்த வகையில் இப்படத்துக்கு தானே ஓர் ஒன்லைன் சொல்லி, அதை நெல்சன் இயக்க, திரைக்கதையில் கே.எஸ்.ரவிக்குமாரின் பங்கும் இருக்குமாறு திட்டமிட்டுள்ளாராம் நடிகர் ரஜினி. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 


நெல்சனைப் பொறுத்தவரை அவரது முந்தைய படங்களான டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகியவை ஆங்கிலப் பெயர்களில் அமைந்திருந்தன. இதனால் ரஜினியின் இந்தப் படமும் அதேபோலத்தான் அமையவுள்ளதாகவும் அதன்படி படத்துக்கு பாஸ் என வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுவந்தது.



மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!


இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் பற்றி புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்துக்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளதால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்ற வகையில் இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR