விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) அடுத்த படம் ‘க/பெ. ரணசிங்கம்’ (Ka Pae Ranasingam) அக்டோபர் 2 ஆம் தேதி OTT தளத்தில் (OTT DTH Platform) வெளியிடப்படுகிறது. சூர்யாவின் (Suriya) சூரரை போற்று (Soorarai Pottru) படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதிஸ் க/பெ. ரணசிங்கம்’ தயாரிப்பாளர்கள் படம் OTT தளத்தில் வெளியிடுவதாக அறிவித்தனர். தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட பின்னர் OTT தளத்தில் வெளியான முதல் தமிழ் படம் ஜோதிகாவின் (Jyotika) பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது பெரும் அழுத்தம் கொடுத்து நிறைய படங்கள் இதை பின்பற்றி வந்தன. சமீபத்திய விஷயம் என்னவென்றால், ‘க/பெ. ரணசிங்கம்’ OTT தளத்தில் வெளியிடுவது குறித்து விஜய் சேதுபதி மகிழ்ச்சியடையவில்லை.


 


ALSO READ | விஜய் சேதுபதியின் ‘க/பெ. ரணசிங்கம்’: OTT, DTH தளத்தில் October 2 ரிலீஸ்!!


விஜய் சேதுபதியின் மற்ற படங்களான மாமானிதன் (Maamanithan), கடைசி விவசாயி (Kadaisi Vivasayi), துக்ளக் தர்பார் (Tughlaq Durbar) OTT தளத்தில் வெளியிடப்படலாம் என்று ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. விஜய் சேதுபதி தனது படங்கள் OTT தளத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடையவில்லை என்பது போலவும், OTT தளத்தில் வெளியான அவரது படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்களின் பிரதிபலிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் தெரிகிறது. 


பல நடிகர்கள் தங்களது எதிர்கால படங்களின் வெளியீட்டை தீர்மானிப்பதில் குழப்பத்தில் உள்ளனர். OTT தளங்களில் பல படங்கள் வெளியிடுவதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) நடித்துள்ளார். விருமாண்டி (Virumandi) இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரங்கராஜ் பாண்டே, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்து, பவானி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். ஜிப்ரான் (Jibran) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


ALSO READ | OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம்..!