OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம்..!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் க.பெ.ரணசிங்கம் படம் zeeplex ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது..!

Last Updated : Sep 11, 2020, 01:15 PM IST
OTT-ல் வெளியாகிறது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம்..! title=

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் க.பெ.ரணசிங்கம் படம் zeeplex ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது..!

இயக்குனர் பி.விருமந்தி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த திரைப்படமான க.பெ.ரணசிங்கம் படம் OTT தளத்தில் 'பார்வை கட்டணம்' முறையில் வெளியாக உள்ளது. அதாவது, படத்தை ஒரு முறை பார்க்க குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பார்க்க வேண்டும். முதன்முதலில் இந்த முறையில் வெளியாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' படத்தையும் இதே முறையில் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

ALSO READ | 'உங்கள் தைரியத்திற்கு ஹேட்ஸ் ஆஃப்'... கங்கனாவை பகத் சிங்குடன் ஒப்பிடும் விஷால்!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் OTT தளங்களில் நேரடியாக படங்களை வெளியிடும் முறை ஆரம்பமாகியது. இப்போது ஒரு முறை பார்ப்பதற்கே கட்டணம் செலுத்தி படம் பார்க்கும் முறையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இந்த முறைதான் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் விதத்தில் அமையும்.

சுமார் 5 இந்திய மொழிகளில் 10 உலக மொழிகளில் சப்டைட்டிலுடன், 150 நாடுகளுக்கும் மேல் படத்தை வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தின் இசையமைப்பாளர் கிப்ரான், ஒளிப்பதிவு என்.கே.அகாம்பரமும் செய்துள்ளனர்.

Trending News