கடந்த 3 வருடங்களாக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு  மகிழ்சி. இது நம்ம ஆளு நாளை ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து சிம்பு கூறியதாவது:-


"இது நம்ம ஆளு படம்"  வெறும் காதலை மட்டும் பேசும் படம் இல்லாமல் பெண்ணகளை பற்றி உயர்வாக சொல்லும் ஒரு படம். அது மற்றும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் இப்படம் இருக்கும்.


இந்த படத்தில் நடித்து எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.


தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்த நயன்தாராவுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். 


இயக்குநர் பாண்டிராஜுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படம் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.


எனது தந்தைக்கும் மற்றும் எனது தம்பி குறளரசன் ஆகியோருக்கு எனது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.


எனது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இருகரங்களை குவித்து நன்றி சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கு 'நான் தலை வணங்கி நன்றி கூறுகிறேன் என்றார்.