ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக, தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமை உதவித்தொகை திட்டம் உள்ளது. இது முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய முக்கிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கியமான ஒரு விஷயமாக இந்த மகளிர் உரிமை தொகை பார்க்கப்பட்டது. மேலும் இதன் மூலம் கடந்த தேர்தல்களின் போது பெண்களின் வாக்குகளில் கணிசமான பங்கை திமுக வெற்றிகரமாகப் பெற்றது. இந்த லட்சிய திட்டம் செப்டம்பர் 2023 முதல் நடைமுறையில் உள்ளது.
மேலும் படிக்க | மாணவி பாலியல் வன்கொடுமை : தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை!
தற்போது குறிப்பிடத்தக்க வகையில் 1.14 கோடி பெண்கள் தமிழக அரசின் இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், 1,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். மேலும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும், விண்ணப்ப தவறியவர்களுக்கும் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளித்துள்ளது. தகுதியுடைய பெண்கள், இந்த திட்டத்தில் உடனடியாக சேர்க்கப்படுவார்கள் என்று துறை சார்ந்த அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல பெண்களுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் இறுதி விரிவான பட்ஜெட் இதுவாகும். அதைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். 2026 தேர்தலில் திமுக கடும் போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக விஜய் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய ஒரு எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு, உதவித்தொகையை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்துவது ஆகும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பெண்களின் வாழ்வில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை திமுக நிரூபிக்கும். சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து தான் திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கான அதிக சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மூலம் வாக்காளர்களைக் கவர திமுகவின் தலைமை திட்டமிட்டு வருவதாகத் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழக அரசு தான் இது போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது தமிழ்நாட்டின் முன்னணியைத் தொடர்ந்து, பல மாநிலங்களும் பெண்களுக்கான உரிமை தொகையை வழங்கி வருகிறது.
மேலும் படிக்க | இந்த காரணத்திற்காக தான் பொங்கல் பரிசில் ரூ. 1000 இல்லை! அமைச்சர் கொடுத்த விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ