நடிகர் ஜெய் சம்பள விவரம்: ராஜா ராணி படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஜெய் தற்போது மீண்டும் அன்னபூரணி படத்தில் ஜோடியாக நடிக்க வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ஜெய்:
ஜெய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர். ஜெய் தன் 16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர். பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இவர் நடித்த ராஜா ராணி, கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது.


லேபில் வெப் சீரிஸ்:
இதற்கிடையில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ள நிலையில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இந்த சீரிஸ் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த சீரிஸின் முதல் மூன்று எபிஸோடுகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நவம்பர் 10 அன்று ஸ்ட்ரீம் செய்தது. முதல் மூன்று எபிஸோடுகள் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நான்காவது எபிஸோடை ஸ்ட்ரீமிங் செய்தது. ஒவ்வொரு புதிய எபிஸோடும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.


மேலும் படிக்க | அடுத்த மாதம் 2 நாட்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாது - திரையுலகம் அறிவிப்பு!


ராஜா ராணி டூ அன்னபூரணி:
இதனிடையே ஜெய் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவர்களுடைய ஜோடி. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி அன்னபூரணி படத்தில் இணைந்துள்ளார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.



ஜெய் சம்பளம் விவரம்:
இந்நிலையில் தற்போது அன்னபூரணி நடிக்க நயன்தாரா மற்றும் ஜெய் வாக்கிய சம்பளம் எவ்வளவு என்கிற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். அதே போல் நடிகர் ஜெய் இப்படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு! மன்சூர் அலிகானுக்கு மேலும் புதிய சிக்கல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ