“எதிர்பார்த்த மாதிரி இல்லையே..” ரசிகர்களை ஏமாற்றிய ஜெயிலர்? ட்விட்டர் விமர்சனம்!
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் தமிழகத்தில் மட்டும் லேட்டாக ரிலீஸாகிறது. பிற மாநிலங்களில் முன்னதாகவே ரிலீஸாகி டிவிட்டரில் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் மட்டும் தாமதமாக ரிலீஸ்!
ஜெயிலர் திரைப்படம், தமிழகத்தில் மட்டும் தாமதமாக ரிலீஸ் செய்யப்படுகிறது. அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் ஜெயிலர் படம் முன்னதாகவே ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் ஜெயிலர் ரிலீஸாகி விட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ஜெயிலர் 9 மணியளவில் வெளிவர இருக்கிறது. இதற்கு தமிழநாட்டில் விதித்த சட்டதிட்டங்கள் காரணம் என கூறப்படுகிறது. சரி, இந்த படத்திற்கு ரசிகர்கள் என்னென்ன விமர்சனங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | இமயமலைக்கு சென்றவுடன் ரஜினி செய்யும் முதல் வேலை இதுதான்!
"பீஸ்ட் வில்லனே பரவால்ல..”
இதற்கு முன்னர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் வில்லனையும் ஜெயிலர் பட வில்லனையும் ஒப்பிட்டு ஒரு ரசிகர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அப்படி படத்தின் வில்லன் என்ன செய்து இருப்பார் என குழம்பி வருகின்றனர்.
ஒரே வார்த்தையில் விமர்சனம்!
ஜெயிலர் படத்திற்கு ஒரு ரசிகர் ஒரே வார்த்தையில் விமர்சனம் கொடுத்துள்ளார்.
பாபா படத்தில் வரும் “ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்...” பாடலின் மீம் டெம்ப்ளேட்டை வைத்து அவர் ஜெயிலர் படத்தை வர்ணித்துள்ளார்.
எல்லாமே குறைதான்!
ஜெயிலர் படத்தில் ஏதேனும் ஒரு குறை கூறினால் பரவாயில்லை. ஒரு ரசிகர் படத்தில் உள்ள அனைத்தையும் குறையாக கூறியிருக்கிறார்.
முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி மொக்கை, டார்க் காமெடி செட் ஆகவில்லை என லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே செல்கிறார் அந்த ரசிகர்.
பாசிடிவ் விமர்சனங்கள்:
ஜெயிலர் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர். அதனால், விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே சிலர் இது போன்ற நெகடிவான விமர்சனங்கள் பலவற்றை பரப்பி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் ரசிகர்கள், ட்விட்டரில் பாசிடிவ் விமர்சங்களையும் கொடுத்துள்ளனர். அதில் சிலவற்றை பார்க்கலாம்.
ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோரின் காமெடி நன்றாக இருந்ததாகவும் படத்தின் இறுதியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருந்ததாகவும் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த ரசிகர், மொத்தத்தில் படம் அருமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
”திரும்ப திரும்ப போய் பார்க்கலாம்..”
ஜெயிலர் படத்தை திரையரங்கிற்கு மீண்டும் மீண்டும் சென்று பார்க்கலாம் என ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், ஜெயிச்சிட்ட நெல்சா என இயக்குநரையும் புகழ்ந்துள்ளார்.
“நல்ல திரைக்கதை-எல்லாமே நல்லா இருக்கு”
ஒரு ரசிகர் ஜெயிலர் படத்தின் இசை, காட்சிகள், கதை, நடிப்பு என அனைத்தயும் புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அந்த ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், நடிகர் ரஜினிகாந்தை அமைதியான கதாப்பாத்திரத்தில் காண்பித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார், யோகி பாபு மற்றும் ரஜினிகாந்தின் காட்சிகள் நன்றாக வர்க் அவுட் ஆகியிருப்பதாகவும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனிருத்தின் இசை, ஹுக்கும் பின்னணி இசை என அனைத்தும் நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ