கொரோனா அச்சம்....நடிகர் தனுஷ் வெளியிட்ட கோரிக்கை வீடியோ..!!
கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்க நடிகர் தனுஷ் கோரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதை பற்றி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாளை மக்கள் ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தமிழக அரசு தொடங்கி பல்வேறு பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் தனுஷ் வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ இதோ.,
இவ்வாறு தனுஷ் பேசியுள்ளார்.