ஜப்பான் படத்தின் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்: ஜப்பான் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் திரைப்படம்:


நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜப்பான் (Japan) படம் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. காரணம் கார்த்தி இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் நடித்திருந்தது தான். இது தவிர கார்த்தி நடிப்பில் வெளியாகும் 25வது படம் ஜப்பான் ஆகும். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.  இந்த திரைப்படத்தில் கார்த்தி தவிர சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தார். சத்யன் சூரியன் மற்றும் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பிலோமீன் ராஜ் மேற்கொண்டு இருந்துள்ளார். 


ஜப்பான் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் நிலவரம்:


தமிழ் நாட்டில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, ஜப்பான் (Japan Box Office Collection Day 3) திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் தனது டைலாக் பேசும் தொனியை மாற்றி இதில் நடித்திருக்கிறார். இப்படமும் ரிலீஸாகி முதல் நாளில் 4.15 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாள் கலெக்‌ஷன் 3 கோடி ரூபாய் மட்டுமே என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாள் கலெக்‌ஷன் 3 கோடி ரூபாய் மட்டுமே என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-ஆ? ஜப்பானா? அதிக வசூல் செய்துள்ள தீபாவளி திரைப்படம் எது?


மூன்று நாட்களில் கார்த்தியின் ஜப்பான் படம் செய்துள்ள வசூல் நிலவரம்:


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கார்த்தியின் ஜப்பான் படம் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. மொத்தமாக மூன்று நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 11 கோடி வசூலை ஜப்பான் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார், 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால், இந்தாண்டு ஜப்பான் திரைப்படத்தின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. இன்று தீபாவளி என்பதால், ஜப்பான் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.


ஜப்பான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூன்றாம் நாள்:
உலகம் முழுவதும் 4.05 கோடி வசூல் செய்துள்ளது
2 கோடி தமிழகத்தின் மொத்த வசூல்
இந்திய முழுவதும்: 3.5 கோடி


மொத்தமாக மூன்று நாட்களில் ஜப்பான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு:
உலகம் முழுவதும் 18.1 கோடி வசூல் செய்துள்ளது
இந்திய முழுவதும்: 14.4 கோடி மொத்த அல்லது 12.2 கோடி நிகர


ஜப்பான் (Japan Movie) படத்தின் பட்ஜெட்:
விளம்பரச் செலவையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 80 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் உருவாக்கப்பட்டது.


மேலும் படிக்க | காேலாகலமாக நடைப்பெற்ற காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த விழா! திருமணம் எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ