2 நாளில் 200 கோடியை தாண்டிய ஜவான்..! அசல் வசூல் நிலவரம் என்ன?
Jawan Box Office Collection Worldwide: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் திரைப்படம் 2 நாட்களில் 200 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
ஜவான் திரைப்படம்:
கோலிவுட்டில் சில படங்களையே இயக்கியிருந்தாலும் பெரும் உயரத்திற்கு சென்ற இளம் இயக்குநர்களுள் ஒருவர், அட்லீ. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என எடுத்த அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார். இவர் ஜவான் படம் மூலம் இறங்கிய களம், பாலிவுட். இந்த படத்தில், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். படம், இரண்டு நாட்களுக்கு முன்னர் (செப்., 7) வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க | மார்க் ஆண்டனி படத்திற்கு தடை! விஷால் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
படத்தின் வசூல்:
ஜவான் படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 73 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் நாளின் வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது. அதில், படம் இந்திய அளவில் மட்டும் இதுவரை 53 கோடியை தாண்டி வசூலை குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சினிமா வட்டாரங்களில் இருப்போர் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், ஜவான் படம் உலக அளவில் 230 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான ஷாருக்கானின் படமான ‘பதான்’ இதே அளவில்தான் உலக அளவில் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் எவ்வளவு..?
ஜவான் படத்தை, ஷாருக்கானின் மனைவி கெளரி கான் நடத்தும் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்துள்ளதால் அவர்களின் சம்பளமே பாதி பட்ஜெட்டிற்கு போய்விட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 300 கோடி செலவில் படம் வெளியானதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
இரண்டு வேடங்களில் ஷாருக்கான்..
நடிகர் ஷாருக்கான் பல ஆண்டுகளுக்கு பிறகு அப்பா-மகன் என ஜவான் படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். அப்பா கதாப்பாத்திரத்தின் பெயர் விக்ரம் ராத்தோர். மகன் கதாப்பாத்திரத்தின் பெயர், அசாத். இளமையான கதாப்பாத்திரத்தில் காதல்-காமெடி கொஞ்சம் ஆக்ஷன் என கலக்கும் இவர், வயதான அப்பா கதாப்பாத்திரத்திலும் பறந்து பறந்து சண்டை போடுகிறார். ஷாருக்கானுக்கு ஆக்ஷன் பெரிதாக வர்க-அவுட் ஆகாது என்ற கருத்து உள்ளது. ஆனால், கடைசியாக வெளியான ‘பதான்’ படத்தில் இதை அவர் மாற்றியமைத்தார். அதே போல ஜவான் படத்திலும் 5 பேரை அசால்டாக தூக்கிப்போட்டு அதகளம் காட்டியிருக்கிறார்.
கதாநாயகிகயாக நயன்தாரா..
அட்லியின் ‘ராஜா ராணி’ படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார் நயன்தாரா. அதன் பிறகு அவர் இயக்கிய ‘பிகில்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜவான் படத்திலும் அதே கதையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவர் ‘நர்மதா’ என்ற காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனாலும், இதில் ஷாருக்கானுடன் ரொமான்ஸ் மற்றும் அவ்வப்போது வரும் சண்டை காட்சிகளை தவிர பெரிதாக இவருக்கு வேலை இல்லாதது போல இருந்ததாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ