தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றியை மனசாரக் கொண்டாடுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஃபெப்சி அறிவித்துள்ளது.
ஃபெப்சியின் டிவிட்டர் பக்கத்தில்
"முதலமைச்சர் அம்மா அவர்களின் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தொழிலாளர்களாகிய நாங்கள் மனசாரக் கொண்டாடுகிறோம். இதை அம்மாவைச் சந்தித்து தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்தார்கள். ஃபெப்சி தொழிலாளர்கள் சார்பில் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வரலாற்று சாதனைப் படைத்த அம்மாவை வாழ்த்தி செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் தொழிலாளர் அமைப்பு ஃபெப்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக ஜெயலலிதாவுக்கு நேரில் போய் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிபிடத்தக்கது.