ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி

மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் கதறி அழும் காட்சியையும் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று காலை நடிகை திரிஷா ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். திரிஷா மட்டும் போலீசாரின் பாதுகாப்பு அரண்களை தாண்டி ஜெயலலிதா சமாதி அருகே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். .
தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.