தனது சொந்த குரலில் ஹிந்தியில் பாடிய ஜெயலலிதா: வீடியோ இணைப்பு
பல தமிழ் பாடல்களை பாடி அனைவரையும் வசீகர செய்த மறைந்த செல்வி ஜெயலலிதா, இந்தியிலும் பாடியுள்ளார். அதன் வீடியோ இணைக்கபட்டு உள்ளது.
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா சிறந்த நடிகை மற்றும் சிறந்த அரசியல் தலைவர் என்பது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல்வளமும் மிக்கவராக திகழ்ந்தவர். திரைத்துறையில் இருக்கும் தனது சொந்தக் குரலில் பல தமிழ் பாடல்களை பாடி அனைவரையும் வசீகர வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவை செய்தியாளர் பேட்டி எடுக்கும் போது, இடையில் உங்களுக்கு பிடித்த இந்தி பாடல் ஏதாவது பாடுங்க எனக் கேட்டார். அப்பொழுது அவர்களுக்கு பிடித்த ஒரு ஹிந்தி பாடலையும் பாடினர்.
அம்மா என்று பலராலும் அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து 75 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என அறிவித்திருந்த நிலையில், 2016 டிசம்பர் 4-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு அனைவரையும் கலங்கச்செய்தது.
செல்வி ஜெயலலிதா பாடிய இந்தி பாடலை காணுவோம்.....!!