Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படமான  “சைரன்” படம்  பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது  ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் டீசரில் வெளியான ஜெயம் ரவியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், பெரும் வரவேற்பை குவித்தது. ஜெயம் ரவி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு பாத்திரங்களில் தோன்றுகிறார்.


மேலும் படிக்க | விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!


ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம்ரவி பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லரை,  விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது. இதுவரையிலான ஜெயம்ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் சைரன் படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 


மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


சைரன் படம், உலகெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


மேலும் படிக்க | விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ