விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?

Ethirneechal Actress In GOAT Movie: விஜய்யின் 68வது படமான GOAT-ல், எதிர்நீச்சல் தொடர் நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறாராம். அவர் யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Jan 23, 2024, 12:53 PM IST
  • விஜய்யின் 68வது படம், GOAT.
  • இதில் எதிர்நீச்சல் நடிகை நடிக்கிறாராம்.
  • அவர் யார் தெரியுமா?
விஜய்யின் GOAT படத்தில் நடிக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை! யார் தெரியுமா?  title=

Ethirneechal Actress Kaniha In Vijay's GOAT Movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், Greatest Of All Time (GOAT). இந்த படத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றனர். 

GOAT திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், முதன் முறையாக வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்துள்ள படம், GOAT. ‘ஜாலி’ இயக்குநர் என ரசிகர்களிடம் பெயர் வாங்கிய வெங்கட் பிரபு, இந்த படத்தின் மூலம் விஜய் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மைக் மோகன், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

விஜய்யுடன் நடிக்கும் ‘எதிர் நீச்சல்’ தொடர் நடிகை..! 

தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ள தொடர், ‘எதிர் நீச்சல்’. பெண்களையும் அவர்கள் இந்த சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் காண்பிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு, பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இதில், முக்கிய கதாப்பாத்திரங்கள் பல இருந்தாலும், ரசிகர்களின் மனங்களில் நல்ல இடத்தை பிடித்த கேரக்டர்கள் என சில மட்டுமே உள்ளன. அப்படி, பலர் மனதில் ‘ஈஸ்வரி’ எனும் கதாப்பாத்திரமாக பதிந்து போனவர், கனிகா.

Kaniha

பயந்த சுபாவம் கொண்ட மருமகளாக தோன்றி, தற்போது இவரும் இந்த சீரியலில் உள்ள புரட்சி பெண் கதாப்பாத்திரமாக இருக்கிறார். கனிகா, தற்போது நடிகர் விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | Kuralarasan: குரலரசனுக்கு குழந்தை பிறந்தது..பெரியப்பாவானார் சிம்பு!

வெங்கட் பிரபுவுடன் புகைப்படம்..

GOAT படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள வெங்கட் பிரபுவுடன் கனிகா புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இவரும் GOAT படத்தில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இவர், உண்மையாகவே இப்படத்தில் நடித்துள்ளாரா, அல்லது யாருக்கேனும் டப்பிங் பேசியுள்ளாரா என்பது நாட்கள் கடந்தால்தான் தெரியும். 

Kaniha

யார் இந்த கனிகா? 

மதுரையில் பிறந்து வளர்ந்தவர், கனிகா. திவ்யா என்ற தனது பெயரை திறைத்துறைக்காக மாற்றிக்கொண்டார். இவர், மேடை நிகழ்ச்சிகளிலும் சில படங்களிலும் பாடல் பாடியுள்ளார். மணி ரத்னம் இயக்கதில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ்திரையுலகிற்குள் நுழைந்தார் கனிகா. அடுத்து, கிராமத்து பெண் கதாப்பாத்திரம், நகரத்து பெண் கதாப்பாத்திரம் என மாறி மாறி நடித்தார். ‘தளபதி’ படத்தின் கன்னட ரீ-மேக்கிலும் மணி ரத்னம் இயக்கத்தில் நடித்திருந்தார். வரிசையாக இஅவருக்கு தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்ந்து ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், பின்னாளில் அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். இவருக்கு ‘எதிர் நீச்சல்’ தொடர் இழந்த ரசிகர் கூட்டத்தை மீண்டும் பெற்றத்தர வாய்ப்பாக அமைந்தது. சீரியல்களில் நடித்தாலும், படங்களிலும் ஹீரோயின்களுக்கு வாய்ஸ் கொடுத்து வந்தார். 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டுகளில் நாம் பார்த்த படங்களில் இவர்தான் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், இவர் விஜய்யுடன் GOAT படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News